ஒன்பதாவது நாளாகவும் தொடரும் இரணைதீவு மக்களின் போராட்டம்

கிளிநொச்சி, இரணைதீவு மக்கள் சொந்த ஊரிற்கு செல்ல அனுமதிக்குமாறு கோரி முன்னெடுத்து வரும் போராட்டம் 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கையில்,

வளமாகவும், ஆரோக்கியமாகவும் மற்றும் நிம்மதியாகவும் வாழ்ந்த ஊரிலிருந்து நாங்கள் வெளியேற்றப்பட்டு 24 வருடங்கள் ஆகின்றன.

எனவே எங்களை மீண்டும் ஊருக்குச் செல்ல விடுங்கள் என கண்ணீருடன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சொந்த ஊரில் கால் பதிக்காமல் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

You might also like