​வெசாக் பண்டிகைக்காக எழுச்சி கொண்டுள்ளது வவுனியா நகரம்

வவுனியா போதி தக்ஸினாராம விகாரையில் 25 வெளிச்சக் கூடுகள் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

அத்துடன் ஏ – 9 வீதியில் மூன்று முறிப்பு சந்தியிலிருந்து ஒமந்தை வரையிலும் 30க்கும் அதிகமான கூடுகள் வீதி ஓரங்களில் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரின் பல இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வெசாக் அலங்கார வெளிச்சக் கூடுகளை பார்வையிட வரும் பொதுமக்களுடைய பாதுகாப்பு கருதி இரவு முழுவதும் நகரில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like