வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பேருந்து நிலையத்தை அமைக்க கோரிக்கை

வவுனியா பேருந்து நிலையத்தினை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள நகரசபைக்கு சொந்தமான இடத்தில் அமைத்துதருமாறு வவுனியா வர்த்தகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர் ப. டெனீஸ்வரனுக்கு வவுனியா வர்த்தகர் சங்கம் இன்று கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாவனைக்கு ஏற்ற இடங்களைத் தெரிவு செய்து திறந்து வைக்கப்படவில்லை. பல கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டும் மக்கள் பாவனையற்றுக்கிடக்கின்றது.

எனவே வவுனியா இ.போ.ச பேருந்துகள் தற்போது இருக்கும் பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை மேற்கொள்ள முடியும்.

தனியார் பேருந்து தரிப்பிடத்தினை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள நகரசபைக்குச் சொந்தமான இடத்தில் அமைத்து தருமாறு, வடமாகாண போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் வவுனியா வர்த்தகர் சங்கம் கோரியுள்ளது.

அத்துடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like