பல்கலைக்கழக மாணவியின் சடலம் குளியலறையிலிருந்து மீட்பு

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டில் கல்வி பயிலும் 27 வயது மாணவி ஒருவரின் சடலம் குளியலறையிலிருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிலியந்தல மதபத்த பகுதியில் உள்ள குறித்த பெண்ணின் வீட்டில் உள்ள குளியலறையிலிருந்தே அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் கணவரே சடலத்தை நேற்றைய தினம் மீட்டுள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தற்போது உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like