பௌத்த மயமாக்கப்படும் கிளிநொச்சி – வரலாறு காணாத வெசாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு

கிளிநொச்சியில்  மிகப் பிரமாண்டமான அளவில் வெசாக் தினக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு படையினர் ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மௌரியப் பேரரசரான அசோகரின் மூத்த மகனான மகிந்த தேரர் 2319 ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சிக்கு வந்ததாகவும் அதனை நினைவுகூரும் வகையில் இந்த ஆண்டு பெருமெடுப்பில் கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கிளிநொச்சியில் பிரமாண்டமான வெசாக் பந்தல் மற்றும் அலங்காரங்களை மேற்கொள்வதற்கு படையினர் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவம், விமானப்படை, பொலிஸார் ஆகியோர் இணைந்து கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பாரிய பந்தலை அமைத்து வருகிறனர்.

அத்துடன் ஏ9 வீதியில் இரணைமடு தொடக்கம் பரந்தன் வரையான பகுதியை பௌத்த கொடிகள், வெசாக் கூடுகளால் அலங்கரிக்கவும் படையினர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது

You might also like