யாழில் கலைகட்டியுள்ள வெசாக் பண்டிகை! பிரமாண்டமாக அமைக்கப்படும் தோரணங்கள்
இம்முறை ஐக்கிய நாடுகள் வெசாக் தினம் இலங்கையில் கொண்டாடப்படவுள்ள நிலையில், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் வெசாக் பண்டிகை கலைகட்ட தொடங்கியுள்ளது.
குறிப்பாக கண்டி, அனுராதபுரம், பொலன்னறுவை, காலி, உள்ளிட்ட நகரங்களில் பாரிய அளவிலான வெசாக் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வெசாக் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது.
அந்த வகையில் இம்முறை யாழ்ப்பாணத்திலும், வெசாக் பண்டிகை சிறப்பு பெற்றுள்ளது. குறிப்பாக வெசாக் கூடுகள் தயாரிப்பதிலும், வெசாக் தோரணங்கள் அமைப்பதிலும் படையினர் தீவரமாக செயற்பட்டு வருகின்றனர்.
இதன்படி, யாழ். பொதுநூலகச் சுற்று வளாகத்தில் பிரமாண்டமான வெசாக் தோரணங்கள் படையினரால் அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/19x6g8bHKO4