வயிறு வலியென சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு ஆண் குழந்தை!

வயிறு வலியென வைத்தியசாலைக்கு சென்ற மாணவி குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தெஹிஅத்தகண்டிய வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபர் தெஹிஅத்தகண்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவுக்காரரான விஜயலத் விதுரகே சோமவீர என்ற 35 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி குழந்தையை பெற்றெடுக்கும் வரையில் தாம் இதனை அறிந்திருக்கவில்லை என சிறுமியின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தில் மூத்த பிள்ளையான சிறுமிக்கு மற்றுமொரு சகோதரி உள்ளார். அவரது பெற்றோர் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் தொழிலுக்கு சென்ற பின்னர் வீட்டிற்கு வரும் சந்தேகநபர், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஒகஸ்ட் மாதம் வரை தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையை வயிற்றில் சுமந்தவாறு பாடசாலை சென்ற சிறுமி கடந்த வருடம் இடம்பெற்ற சாதாரண தர பரீட்சை எழுதியுள்ளதுடன் நான்கு பாடங்களில் சித்தியடைந்துள்ளார்.

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை பொதுவான முறையில் நடத்தி செல்கின்ற அவர் எவ்வித நிகழ்வுகளிலும் கலந்துக் கொள்ளவில்லை.

தற்போது தாய் மற்றும் குழந்தை நலமாக உள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெஹிஅத்தகண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like