7 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றேன்: சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம்

கன்னியாகுமாரில் 17 வயது சிறுவன் 7 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி வாரியூர் பகுதியை சேர்ந்த வீரலெட்சுமி (63) என்பவர் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி மர்மான முறையில் மாயமானார்.

இதுகுறித்து பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் நடத்திய விசாரணையில் கடந்த 6 ஆம் திகதி, கண்ணுபொத்தை மலைப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த வீரலெட்சுமியின் உடலை பொலிசார் கைப்பற்றினர்.

இதில், 7 பேர் கொண்ட கும்பல் வீரலெட்சுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த குற்றவாளிகளில் ஒருவரான 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

வீரலெட்சுமி மட்டுமின்றி இதற்கு முன் 6 பெண்களை இதே பாணியில் இந்த காட்டு பகுதிக்கு கொண்டு வந்து பலாத்காரம் செய்ததாக பகீர் தகவல்களை சிறுவன் தெரிவித்துள்ளான்.

இதையடுத்து தனிப்படை பொலிசார் மலைப்பகுதியில் முகாமிட்டு பெண்களின் உடல்களை தேடி வருகின்றனர்.

இதில், இளம்பெண்களின் ஆடைகள், சில எலும்பு துண்டுகளும் சிக்கின. தடயவியல் சோதனைக்கு பிறகே இது மனித எலும்புதானா என்பது தெரியவரும். கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல்கள் வன விலங்குகளுக்கு இரையாகி இருக்குமா? என்ற சந்தேகமும் எழுந்து இருக்கிறது என்று பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள.

தற்போது இந்த வழக்கில் கைதாகி உள்ள 17 வயது சிறுவனை, நாங்குநேரி சிறார் காப்பகத்தில் பொலிசார் அடைத்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் மேலும் 3 பேர் பொலிஸ் பிடியில் இருப்பதாகவும், இன்னும் 3 பேரை கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

You might also like