பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய அரசியல்வாதி: குவியும் பாராட்டுகள்

அவுஸ்திரேலிய செனட்டர் ஒருவர் பாராளுமன்ற அவைக்குள் குழந்தைக்கு பாலூட்டியதன் மூலம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளதாக பலதரப்பு மக்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.

அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான Larissa Waters பாராளுமன்ற அவையில் பசுமைக்கட்சி மேற்கொண்ட வாக்கெடுப்பு ஒன்றின்போது பிறந்து ஒருவாரமேயான தமது குழந்தைக்கு பாலூட்டியுள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து பெருமை பொங்க தமது பேஸ்புக் பக்கத்தில் கருத்திட்ட செனட்டர் Larissa Waters, பாராளுமன்ற அவையில் பாலூட்டப்படும் முதல் குழந்தை தமது மகள் Alia Joy என்பது பெருமைப்படும் விடயம் என தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி இதுபோன்ற குடும்பங்களுக்கு ஆதரவான பணியிடங்கள் மற்றும் தாங்கிக்கொள்ளும் வகையில் அமைந்த குழந்தைகள் காப்பகங்கள் என நாட்டில் அதிகமாக அமைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மகப்பேறுக்கான 10 வாரகால விடுமுறைக்கு பின்னர் பாராளுமன்ற அவைக்கு திரும்பிய செனட்டர் Larissa Waters, தாய்மார்களுக்கான இந்த சிறப்பு சலுகையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

பாராளுமன்ற அவையில் அலுவல் நேரத்தில் பாலூட்டுவதை அனுமதிப்பது குறித்து கடந்த ஆண்டு நடைபெற்ற விவாதத்தின் போது ஆதரவளித்து குறித்த சட்ட வரைவில் திருத்தம் கொண்டு வரவும் பாடுபட்ட Larissa Waters, இதே சட்டத்தில் ஆண்களுக்கும் சிறப்பு சலுகை பெற்றுத்தர முனைப்பு காட்டினார்.

அவுஸ்திரேலிய பாராளுமன்ற அவையில் அலுவல் நேரத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கான சட்டம் அமுலில் இருந்தவையே. ஆனால் Larissa Waters உள்ளிட்ட செனட்டர்கள் ஒன்றிணைந்து அதற்கான கால அவகாசத்தை நீட்டித்தனர். மட்டுமின்றி 8 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் முக்கிய அம்சங்களின் மீது தற்போது திருத்தம் கொண்டுவந்துள்ளனர்.

இதே பசுமைக்கட்சியின் செனட்டராக இருந்த Sarah Hanson-Young என்பவரின் 2 வயது குழந்தையை 8 ஆண்டுகளுக்கு முன்னர் அவையில் இருந்து வெளியேற்றிய சம்பவத்தை அடுத்து பலதரப்பட்ட விவாதங்களுக்கு பின்னர் தற்போது சட்ட திருத்தம் கொண்டு வந்ததுடன் சட்டமாகவும் நிறைவேற்றியுள்ளனர்.

You might also like