வவுனியாவில் இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

தமிழ் விருட்சம் அமைப்பு. கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், நகர வரியிப்பாளர்கள் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த   இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் இன்று (10.05.2017) காலை 8.30மணியளவில் கோவிற்குளம் சிவன் கோவிலுக்கு முன்பாக அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு அடியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் நகர பிதா சந்திரகுலசிங்கம், மாவட்ட காலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தம், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் வ. பிரதீபன். மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ். எஸ். வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு. எஸ். சந்திரகுமார். செயலாளர் மாணிக்கம் ஜெகன். ஆரச உத்தியோகத்த்கள், சமூக ஆர்வலர்கள்,  சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன்,தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமைப்பாளர் வ.பிரதீபன் மற்றும் உறுப்பினர் இந்துஜன் சிவன் கோவில் அன்பக சிறுவர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

அன்னாரின் திருவுருவசிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் தமிழ்மணி அகளங்கன் அவர்களின் உரையும் இடம்பெற்றது.

You might also like