வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக வாகன விபத்து : ஒருவர் காயம்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (10.05.2017) காலை 9.30மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்
இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து ஏ9 வீதியுடாக பயணித்த மோட்டார் சைக்கில் மீது அதே பாதையில் பயணித்த சொகுசு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி காயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.