முல்லைத்தீவு, வட்டுவாகலில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் அழிவு

முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் 300 ஏக்கர் வரையான வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன.

வட்டுவாகல் பகுதியில் மானாவாரி பயிர்ச்செய்கை செய்யப்படும் 300 ஏக்கர் வரையான வயல் நிலங்கள் நெற்பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் தற்போது மழை பொய்த்து வரட்சி நிலவுவதால் மானாவாரி பயிர்ச்செய்கை வயல்கள் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

இவ்வயல் நிலங்களில் 10 வீதமான பயிர்கள் அருகிலுள்ள சிறு நீர்நிலைகளில் இருந்து நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் நீர் இறைக்கபட்டு பாதுகாக்கபட்டுள்ளது.

எனினும் இனியும் மழை பெய்யாவிடில் அச்சிறு நீர்நிலைகளும் வற்றி இப்பகுதி வயல்கள் அழிவடையும் நிலையை அடைந்துள்ளன.

You might also like