வவுனியாவில் சிறப்பிக்கப்பட்ட முழு நிலா கருத்தரங்கு (படங்கள் இணைப்பு)

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் வவுனியா ஆங்கிலச் சங்கத்தடன் இணைந்து நடாத்தும் மாதாந்த முழுநிலாக் கருத்தாடல் நிகழ்வு இன்று (10.05.2017) காலை 10.00மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்த இளைஞர் சங்க மண்டபத்தில் கலை இலக்கிய நண்பர்கள் வட்டத் தலைவர் திரு தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்றது.

அமரர் சு. சிவபாலன் முன்னாள் ஆங்கில சங்க இணைச் செயலாளர் அவரின் இரண்டாவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன்  கலாநிதி கந்தையா சிறிகணேசன் சிரேஸ்ட விரிவுரையாளர் யாழ்ப்பாளப்பல்கலைக்கழகம் அவரின் தலைமையில் ஆங்கில சங்கத்தின் வெளியீடான பாலவனச் சோலை  OASIS 3ஆவது இதழ் இவருடைய ஞாபகர்த்த இதழாக வெளிட்டுவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஒரு அங்கமாக இலங்கைத்தீவை சைக்கிலில் சற்றி வந்து 1515கிலோ மீற்றர் சாதனைப்பயணம் மேற்கொண்ட தர்மலிங்கம் பிரதாபனை கௌரவிக்கும் நிகழ்வகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளை வவுனியா மத்திய மகாவித்தியலாய மாணவர்களும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகளும், மாற்றவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் வன்னி (VAROD) நிறுவனம், மாற்றாற்றல் உடைய மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் புத்திஜீவிகள், அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

You might also like