5436.848 மில்லியன் ரூபா நிதியில் 2016 ல் முல்லைத்தீவில் 6190 அபிவிருத்தி திட்டங்கள்

கடந்த 2016ம் ஆண்டிலே ஒதுக்கீடு செய்யப்பட்ட 5953.677 மில்லியன் ரூபா நிதியில் 5436.848 மில்லியன் ரூபா நிதியில் 2016 ல் முல்லையில் 6190 அபிவிருத்தி திட்டங்களுக்காக செலவுசெய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.

இன்று (வெள்ளிக்கிழமை(07.01.2017) காலை 9.00 மணிக்கு மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அரசாங்கத்தினால் அமுல்ப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதமாக ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்டத்தின் சகல திணைக்கள அதிகாரிகளும் பிரதேச செயலாளர்கள் மாவட்டசெயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு அவர்களது திணைக்களங்களால் செயற்ப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்தனர்.

அந்தவகையில் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டத்தினூடாக 277 வேலைகளுக்காக 38.72 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 37.3 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஊடாக 163 வேலைகளுக்காக 139.03 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 135.96 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் ஊடாக 4508 வேலைகளுக்காக 1283.4 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 1184.12 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் ஊடாக 02 வேலைகளுக்காக 36 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 36 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் ஊடாக 46.87 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 46.87 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

புனர்வாழ்வு அதிகாரசபை ஊடாக 05 வேலைகளுக்காக 7.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 5.9 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிகதி செயலகம் ஊடாக 7 வேலைகளுக்காக 0.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 0.5 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் திவிநெகும திணைக்களம் ஊடாக 12 வேலைகளுக்காக 405.92 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 405.76 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காணிபயன்காட்டுத்திட்டமிடல் திணைக்களத்தின் ஊடாக 53 வேலைகளுக்காக 0.65 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 0.61 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் திணைக்களம் ஊடாக 9.09 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 9.09 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஊடாக 24.328 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 20.307 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் ஊடாக 04 வேலைகளுக்காக 29.1 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 28.44 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் உலக உணவுத்திட்டம் ஊடாக 05 வேலைகளுக்காக 16.779 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 16.078 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

விவசாய திணைக்களம் ஊடாக 66.87 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 66.87 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கால்நடைகள் உற்பத்திகள் சுகாதார திணைக்களம் ஊடாக 43 வேலைகளுக்காக 26.16 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 26.16 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நீர்ப்பாசன திணைக்களம் ஊடாக 31 வேலைகளுக்காக 658.66 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 658.66 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஊடாக 918 வேலைகளுக்காக 513.13 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 339.83 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் பனை வள அபிவிருத்தி சபை ஊடாக 2 வேலைகளுக்காக 01 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 01 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.

தென்னை அபிவிருத்தி சபை ஊடாக 05 வேலைகளுக்காக 14.04 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 13.763 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களம் ஊடாக 08 வேலைகளுக்காக 71.7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 71.7 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார திணைக்களம் ஊடாக 322.49 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 127.2 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக 14 வேலைகளுக்காக 200.59 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 200.59 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் வலயக்கல்வி திணைக்களம் முல்லைத்தீவு ஊடாக 516.25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 516.25 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும்

வலயக்கல்வி திணைக்களம் துணுக்காய் ஊடாக 357.44 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 357.44 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் ஊடாக 12 வேலைகளுக்காக 101 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 101 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளுராட்சி திணைக்களம் ஊடாக 101 வேலைகளுக்காக 213.36 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 176.35 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தோடு

கிராம அபிவிருத்தி திணைக்களம் ஊடாக 16 வேலைகளுக்காக 11.9 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 11.9 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக 41.2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 41.2 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் நீர்வழங்கல் திணைக்களம் ஊடாக 4 வேலைகளுக்காக 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் 800 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 6190 வேலைகளுக்காக 5953.677 மில்லியன் ஒதுக்கப்பட்டதாகவும் இதில் 5436.848 மில்லியன்ரூபாநிதி செலவு செய்யப்பட்டு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

You might also like