வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 கைதிகள் இன்று (10.05.2017) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் பாரதூரமான குற்றங்கள் அல்லாத சிறிய தவறுகளை செய்தவர்கள் மற்றும் அபராதப் பணத்தை செலுத்த முடியாமல் சிறையில் இருந்த 12 ஆண்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக வவுனியா சிறைச்சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

You might also like