எட்டு வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை – சோகத்தில் மூழ்கிய கிராமம்

அம்பாறையில் சிறுவன் ஒருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்மாந்துறை பிரதேசத்தில் கூரையில் கட்டப்பட்டிருந்த துணி ஒன்றில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எட்டு வயதுடைய சிறுவனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் சம்மாந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவனின் மரணம் காரணமாக அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like