கிளிநொச்சியில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் பெண்கள் அமைப்பு ஊர்வலம்

கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க் கிழமை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் அரும்பு மாவட்ட பெண்கள் சம்மேளனத்தினர் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி, வலைப்பாடு, பள்ளிக்குடா, இரணைமாதாநகர் மற்றும் நாச்சிக்குடா கிராம பெண்கள் ஒன்றிணைந்து பெண்கள் மற்றும் கிராமங்கள்  எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தேவைகள் தொடர்பில் மாவட்ட அரச அதிபருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

ஏனைய கிராமங்களில் உள்ளது போன்று தங்களது கிராமங்களின் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவேண்டும், எனக் தெரிவித்து கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இருந்து ஊர்வலமாக புதிய கச்சேரியை சென்றடைந்து அரச அதிபருக்கான கோரிக்கைள் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்து

மகஜரை மேலதிக மாவட்ட செயலாளர்  பிருந்தாகரன் பெற்றுக்கொண்டார்.

You might also like