வவுனியா உக்குளாங்குளத்தில் பிரதேசமட்ட விளையாட்டுப் போட்டி – 2017

வவுனியா உக்குளாங்குளம் சீர்திருத்தம் விளையாட்டு மைதானத்தில் நேற்று (09.05.217) மாலை 3.00மணியளவில் முன்பள்ளி கட்டமைப்பு நகரம் -01 இன் பிரதேச மட்ட விளையாட்டு போட்டிகள் கட்டமைப்பின் தலைவர் நா.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

இந் விளையாட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராக ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அமைப்பாளர் திரு சந்திரகுமார் , கௌரவ விருந்தினராக  வடக்கு மாகாண சுதேச சுகாதார அமைச்சின் இணைப்பு செயலாளர் திரு. பா. சிந்துஜன் , முன்கல்வி உதவி பணிப்பாளர் கோ தர்மபாலன், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி அருள்வேல் நாயகி, உக்குளாங்குளம் சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு ஹொலி குரோஸ் ,  திருகன்னியர் மட  அருட்சகோதரி , கனரா முன்பள்ளி நிர்வாக தலைவர் ஆகியோரும் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவவர்கள் பெற்றோர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விளையாட்டுபோட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் வெற்றி கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

You might also like