மரக்கிளையில் பல வாரங்களாக கிடந்த மனித சடலம்: கொலையா? தற்கொலையா?

ஜேர்மனி நாட்டில் உள்ள மரத்தில் மனித சடலம் ஒன்று பல வாரங்களாக தொங்கிய நிலையில் இருந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஜேர்மனியில் உள்ள Monchengladbach என்ற சிறிய நகரில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் நபர் ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்தபோது மரத்தில் உருவம் ஒன்று ஒளிந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உருவம் ஒரு பொம்மையாக இருக்கலாம் என எண்ணிய அவர் மரத்தில் ஏறிப்பார்த்தபோது அது ஒரு மனித சடலம் என அறிந்ததும் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் பெற்ற பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு சடலம் கீழே இறக்கப்பட்டது.

ஆண் நபரின் சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் அது பல வாரங்களாக மரக்கிளையில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும், இது கொலையா அல்லது தற்கொலையா என இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

மேலும், எதிர்பாராமல் அதிகளவில் போதை மருந்து எடுத்ததன் காரணமாகவும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள பொலிசார் மருத்துவ முடிவுகள் வெளியானதை தொடர்ந்து முழு அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

 

You might also like