சற்று முன் மன்னார் வீதியில் வாகன விபத்து : பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அதிஸ்டவசமாக உயிர் தப்பினார்

மன்னார்- மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் 11 ஆம் கட்டை பகுதியில் இன்று புதன் கிழமை காலை 11.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் அடம்பன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதவாச்சி வீதியூடாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பொலிஸ் நிலையத்தை நோக்கி காரில் பயணித்துக்கொண்டிருந்த போதே முருங்கன் கட்டுக்கரைக்குளம் 11 ஆம் கட்டை பகுதியில் குறித்த கார் விபத்திற்குள்ளாகியுள்ளது.

அதி வேகமாக பயணித்த குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி முருங்கன் கட்டுக்கரைக்குளம் 11 ஆம் கட்டை பகுதியில் வீதிக்கு அருகில் நின்ற மரம் ஒன்றுடன் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இதன் போது குறித்த காரை செலுத்தி வந்த அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிறு காயங்களுடன் அதிஸ்டவசமாக உயிர் தப்பினார்.

எனினும் குறித்த கார் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

எனினும் சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் மற்றும் அடம்பன் பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் கோபிகரன்

 

You might also like