வவுனியா விநாயகபுரத்தில் மாட்டுடன் மோதுண்டு மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் காயம்

வவுனியா விநாயகபுரத்தில் இன்று (10.05.2017) மாலை 6.15மணியளவில் மாட்டுடன் மோதுண்டு மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நெளுக்குளத்திலிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் பாரதிபுரம் விநாயகபுரம் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் ஒரு மாடு உயிரிலந்ததுடன் ஒரு மாடு காயமடைந்துள்ளது. மோட்டார் சைக்கிலின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like