வவுனியாவில் அமைந்துள்ள வெசாக் வலயம் முழுமையான படத்தொகுப்பு இணைப்பு

ஏ – 9 வீதியில் மூன்று முறிப்பு சந்தியிலிருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரையான பகுதியில் 100க்கு மேற்ப்பட்ட வெசாக் கூடுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அத்துடன் வவுனியா போதி தக்ஸினாராம விகாரைக்கு முன்பாக பல வெசாக் கூடுகளை பொலிஸார் வடிவமைத்து பொதுமக்களின் பார்வைகளுக்காக வைத்துள்ளனர். 

இதனை பார்வையிடுவதற்காக மூன்றுமுறிப்பு பகுதியிலிருந்து வவுனியா நகரம் வரை ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

வவுனியா நகரின் பல இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வெசாக் அலங்கார வெளிச்சக் கூடுகளை பார்வையிட வரும் பொதுமக்களுடைய பாதுகாப்பு கருதி இரவு முழுவதும் நகரில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி சோரத்தின விஜயமுனி தலைமையில் பொதுமக்களுக்கு கடலை தானமாக வழங்கப்ட்டது.

வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் காரியலாயத்தில் கலை நிகழ்வுகள், தாக சாந்தி நிலையங்கள், குளிர்பானங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like