மாவீரா் துயிலுமில்லத்திற்குள் எவரும் செல்ல அனுமதிக்க கூடாது என்ற காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மாவீரா் துயிலுமில்லங்களுக்கு எவரும் செல்ல அனும
திக்க கூடாது என கிளி அவ்வாறு தடை விதிக்க முடியாதும் என்றும் இறந்த தங்கள் உறவுகளை நினைவு கூர அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அத்தோடு பொதுச் சமாதி அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட ஜந்து பேரையும் 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ததோடு, வழக்கை எதிர்வரும் மாதம் 20 ஆம் திகதிக்கு உத்திவைத்துள்ளதுடன் உரியமுறைப்படி அனுமதிகளை பெற்று கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுமாறும் நீதி மன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது