கிளிநொச்சியில் இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் நிகழ்வுகள்

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில்  இராணுவத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

இன்று (புதன்கிழமை) மாலை  கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவன, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ்மா அதிபர் மகேஸ் வெலிகன்ன, உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டு கிளிநொச்சி வெசாக் வலயத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து மத வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

ஏ9 வீதியில் சுமார் 3 கிலோ மீட்டர்கள் வெசாக் தோறணைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விசேடமாக மைதானத்தில் வெசாக் தோரணைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

 

You might also like