வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்தினால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு

வவுனியா மாவட்ட செயகத்தினால் இன்று (10.05.2017) மாலை 5.30மணியளவில் வெசாக் தின நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் அரசாங்க அதிபர்  எம் பி. றோஹன புஸ்பகுமராவினால் தெரிவு செய்யப்பட கணவனை இழந்து  பிள்ளைகளுடன் வறுமையில் வசிக்கும் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கென பசு மாடு (40,000 ரூபா பெறுமதியான) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகத்தின் பணியாளர்களின் நிதிப்பங்களிப்புடன் பயனாளர் ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. த. திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா. உதயராசா, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு. இ. நித்தியானந்தன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் திரு. வ. பிரதீபன், திட்டப்பணிப்பாளர், அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அரசாங்க அதிபர்  எம் பி. றோஹன புஸ்பகுமராவினால் வெசாக் தின ஆரம்ப நிகழ்வான தானம் வழங்கப்பட்டதுடன் அலங்கார தீபத்தை ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.

You might also like