முல்லைத்தீவு முள்ளியவளையில் மதுபோதையில் சாரத்தியம் கடந்த ஆண்டு 128 வழக்கு பதிவுகள்!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2015 ம் ஆண்டு மது போதையில் வாகனம் செலுத்தியவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 55 ஆக இருந்த போதும் அத்தொகை கடந்க 2016 ம் ஆண்டு 128 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் குறித்த பொலிஸ் பகுதியில் 2015 ஆண்டு வீதி விபத்துக்களால் இறந்தவர்களின் தொகை (0) பூச்சியமாக இருக்கின்ற போதும் கடந்த 2016 ம் ஆண்டு வீதி விபத்துக்களால் மூவர் (3) இறந்துள்ளனர்.

2015 ம் ஆண்டு வீதி போக்குவரத்து தொடர்பான வழக்குகளால் குறித்த பொலிஸ் பிரதேசத்திலிருந்து தண்டப்பணமாக ரூபா 1303000.00 அறவிடப்பட்டுள்ளதுடன் கடந்த வருடம் அதாவது 2016 அத்தெகை 2647700.00 ரூபாவாக அகிகரித்துள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவினுடைய பதினெட்டு கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியதான மேற்படி பொலிஸ் நிலையத்தில் கடந்த 2016 ம் ஆண்டு

சட்டவிரோத கசிப்பு தொடர்பாக 105 வழக்குகளும்

சட்டவிரோத சாராய விற்பனை கொடர்பாக 2 வழக்குகளும்

சட்டவிரோத கோடா தொடர்பான வழக்குகழுக்கு 25 வழக்குகளும்

சட்டவிரோத கஞ்சா தொடர்பான 08 வழக்குகளும்

சட்டவிரோத மணல் தொடர்பான 42 வழக்ககளும்

சட்டவிரோத மரம் தொடர்பான 30 வழக்குகளும்

தடைசெய்யப்பட்ட இறைச்சி விற்பனை தொடர்பான 06 வழக்குகளும்

பதியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like