கிளிநொச்சியில் சுழல் காற்று மழை : வீடுகள் முற்றாக சேதம்

கிளிநொச்சி – பெரியபரந்தன் பகுதியில் திடீரென ஏற்பட்ட சுழல் காற்று மழையால் வீட்டுக்கூரைகள் தூக்கி வீசப்பட்டு முற்றாக சேதமடைந்துள்ளது.

இந்த அனர்த்தம் நேற்று (10) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், மழையுடன் சுழல் காற்றும் இடி மின்னல் தாக்கங்களும் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

சுழல் காற்று மழை காரணமாக அப்பகுதியில் காணப்படும் வாழை, பப்பாசி போன்ற பயன் தரும் மரங்களும் முறிந்து விழுந்துள்ளதுடன், 4 நிரந்தர வீடுகளும் 6 தற்காலிக வீடுகளும் சேதமடைந்துள்ளன

மற்றும் பெரியபரந்தன் நெற்களஞ்சியக் கட்டடத்தின் கூரையும் சுழல் காற்றினால் துக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளது.

இதேவேளை, இப்பகுதியில் கடந்த ஏழு வருட காலமாக நிரந்தர வீட்டுத் திட்டம் வழங்கப்படாத நிலையில் தற்காலிக கொட்டகைகளில் வசித்தவர்களின் வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளமையால் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.
You might also like