மட்டகளப்பு வைத்தியசாலையின் நிர்வாக சீர்கேடுகள்: மக்கள் விசனம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடரும் நிர்வாக சீர்கேடுகள் காரணமாக நோயாளர்கள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டியை வீதி ஓரங்களில் நிருத்திவிட்டு சாரதி உட்பட வைத்தியசாலையில் கடமையாற்றும் அதிகாரிகள் படுத்துறங்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது போன்று பல தடவைகள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேற்படி காரணங்களினாலேயே நோய்காவு வண்டிகள் இல்லாமல் மரணங்கள் சம்பவிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

10/05/2017 இன்றைய தினம் மட்டு போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான அம்புலன்ஸ் வண்டியை அதன் சாரதி மட்டகளப்பு புதூர் கத்தா மரத்தடியில் நிறுத்த விட்டு படுத்து உறங்கும் காட்சி புகைப்படங்கள் ஊடாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளன.

ஒரு அரச அதிகாரி வேலை நேரத்தில் இப்படி செய்வது சரியா ? இதற்கு வைத்தியசாலை பணிப்பாளரின் பதில் என்ன?

இதேநேரம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 17 வது விடுதியில் கடமை நேரத்தில் படுத்துறங்கும் ஊழியர்கள் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

குறித்த செய்திகள் தொடர்பான விளக்கங்களை வைத்தியசாலை பணிப்பாளர் ஊடகங்களுக்கு வழங்க வேண்டுமென்று பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like