81 ஆவது நாளாகவும் தீர்வின்றி தொடரும் கிளிநொச்சி மக்களின் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 81 ஆவது நாளாகவும் இன்று(11) தொடர்கின்றது.

இறுதியுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த மற்றும் கடத்திச் செல்லப்பட்ட தங்களுடைய உறவுகள் தொடர்பில் உரிய பதிலை கடந்த எட்டு ஆண்டுகளாக அரசாங்கம் வழங்கவில்லை.

இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பல்வேறு போராட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் தீர்வுமின்றி தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like