வவுனியா வடக்கு நெடுங்கேனியில் சிறப்பாக நடைபெற்ற முழு நிலா கலை விழா

வடக்கு கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் நடத்தும் முழு நிலா கலை விழா இன்று (11.05.2017) வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

வவுனியா வடக்கு கல்வி வலய பணிப்பாளர் வ. ஸ்ரீஸ்கந்தராசா தலைமையில் இடமபெற்ற இந் நிகழ்வில் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பிரதேசத்தினை சித்திரிக்கும் ஊர்திகளும் வலம் வந்திருந்தது.

வவுனியா நெடுங்கேணி முருகன் ஆலயத்தின் அதிதிகளுக்கு மாலை அணிவித்து ஊர்திகள் சகிதம் ஊர்வலமாக அழைத்துவரப்பட:டு மைதானத்தில் ஆரம்பமான நிகழ்வுகளில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கே. கே. மஸ்தான், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், எம். தியாகராசா, ஆர். இந்திரராசா, செ. மயூரன் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like