இந்திய பிரதமருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய நபர் கைது

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை எதிர்த்து எட்கா உடன்படிக்கைக்கு எதிரான தொழில் நிபுணர்களால் அச்சிடப்பட்ட சுவரொட்டி ஒன்றை ஒட்டிக் கொண்டிருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபரை பிணையில் விடுவித்து கொள்ள அவர் சார்பில் சட்டத்தரணி ஒருவர் பொரள்ளை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார்.

எனினும் பொலிஸார் பிணை வழங்க மறுத்துள்ளதுடன், சந்தேக நபர் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

சந்தேக நபர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதால், பிணையில் விடுதலை செய்ய வேண்டாம் என தேசிய புலனாய்வு பிரிவினர் பொரள்ளை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

You might also like