வெசாக் தினத்தினை முன்னிட்டு நாளைய தினம் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கும், நுவரெலியா கல்வி வலயங்களிலுள்ள தமிழ் பாடாசலைகளுக்கும் நாளைய(12) தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளைய தினம் மலையக பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்வதனால் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைக்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் இன்று(11) விடுத்துள்ளார்.

நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட உள்ள ஹட்டன் மற்றும் நுவரெலிய தமிழ் கல்வி வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை வழமையான நிலையில் வழங்கப்பட்டுள்ள விடுமுறைக்கான கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like