கிளிநொச்சி அஞ்சல் அலுவலகம் இனந்தெரியாதோரால் உடைப்பு

கிளிநொச்சி பரந்தன் அஞ்சல் அலுவலகம் இன்று(11) நண்பகல் இனம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கிளிநொச்சி பொலிஸாரினால் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு பொருட்கள் ஏதும் திருடப்பட்டு அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.

You might also like