4 மாத குழந்தைக்கு 6 முறை மாரடைப்பு: அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

மும்பையில் 4 மாத குழந்தைக்கு 6 முறை மாரடைப்பு ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளது.

விசாகா மற்றும் வினோத் தம்பதியினருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்துள்ளது.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்ற 45 வது நாளில் குழந்தைக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தைக்கு பரிசோதனை செய்ததில், குழந்தை இதய பாதிப்புடன் தமனிகள் மாறி இருப்பது தெரியவந்ததையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

சுமார் 12 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையடுத்து இதயம் சீரானது, ஆனால் நுரையீரல் செயல்படவில்லை.

தொடர்ந்து குழந்தையின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தொடர்ச்சியாக குறைந்த கொண்டே வந்தது. கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்தது. இதனால், கடந்த 51 நாட்களாக அந்த குழந்தை ஐசியுவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அப்போது அந்த குழந்தைக்கு 6 முறை மாரடைப்பு ஏற்பட்டது, இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

நுரையீரல் செயல்பாட்டுக்கு கொண்டு வர வென்டிலேட்டர் பயன்படுத்தப்பட்டது. தற்போது, தொடர்ந்து அக்குழந்தையின் நுரையீரல் சரியாக இயங்கி வருகிறது.

அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூ.5 லட்சம் வரை செலவானதாகவும் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த தொகை மருத்துவமனைக்கு கட்டியதாகவும் அந்த குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

You might also like