வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் முல்லைத்தீவின் முன்னணி பெறுபேறுகள்!

​இன்று அதிகாலை வெளியாகிய 2016ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீடசை பெறுபேறுகள் படி முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னணி பெறுபேறுகளை பெற்றவர்களின் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதில் விஞ்ஞான பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி 3A பெறுபேறுகளுடன் மாவட்டத்தில் முதலிடத்திலும் கணித பிரிவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி 2AB பெறுபேறுகளுடன் மாவட்டத்தில் முதலிடத்திலும்,வர்த்தக பிரிவில் 7மாணவர்கள் 3A சித்திகளுடன் மாவட்டத்தில் முதலிடத்திலும் கலைப்பிரிவில் விசுவமடு மகா வித்தியாலயம் 3A சித்திகளுடன் மாவட்டத்தில் முதலிடமும் பெற்று புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரி முன்னணி பெறுபேறுகளுடன் திகழ்கின்றது.

மேலதிக விபரங்கள் திரட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்

You might also like