ஊர்காரர்கள் கைவிட்ட சடலத்தை பாதுகாத்த நாய்!

கலகா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லெவலன் தோட்ட மணிக்கட்டி பிரிவில் குளவி தாக்குதலில் இறந்த ஒருவரின் சடலத்தை புதைக்காமல் அதனை சில மணிநேரம் கைவிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இறந்தவரின் சடலத்தைக்கொண்டு இன்றைய தினம் ஊரவர்கள் மயானத்துக்கு சென்றுள்ளனர். இதன்போது மரம் ஒன்றில் இருந்து குளவிகள் களைந்து சென்று சடலத்தை தாங்கிச் சென்றவர்களை தாக்கியுள்ளன.

இதனையடுத்து சடலத்தை தாங்கிச்சென்றவர்கள் அதனை மயானத்திலேயே கைவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். எனினும் நாய் ஒன்று மாத்திரமே அங்கு சடலத்துடன் நின்றுள்ளது.

சம்பவம் இன்று மாலை 4.30க்கு இடம்பெற்ற நிலையில் மீண்டும் 6 மணியளவிலேயே தனித்துவிடப்பட்ட சடலத்தை ஊரவர்கள் சென்று புதைக்கமுடிந்துள்ளது.

சம்பவத்தின்போது 8பேர் வரை காயமடைந்து கலகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிறுவன் ஒருவர், சடலத்தை புதைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து காயமடைந்ததாக தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like