வவுனியாவில் வீதி புனரமைப்பில் ஊழல் : பொதுமக்கள் விசனம்

வவுனியா தெற்கிலுப்பைக்குளம் பகுதியிலிருந்து வவுனியா செல்லும் பிரதான வீதியானது கடந்த மூன்று தினங்களாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. கடந்த 25வருடங்களுக்கு மேலாக இவ்வீதி புனரமைப்புச் செய்யப்படவில்லை தற்போது இவ்வீதியானது 700மீற்றர் நீளமானதும் 12அடி அகலமானதும் 46இலட்சம் ரூபாவில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வீதியை உயரமாக்கி வெளிக்களத்திலிருந்து இப்பகுதியூடாக செல்லும் மழை நீருக்கான கால்வாய்கள் சரியான முறையில் செய்யப்படவில்லை.

வீதியின் நடுவேயுள்ள இரு கல்வெட்டுக்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றது. அதை சீர் செய்யாமல் வீதியைச் செப்பனிடப்பட்டு வருவதாகவும் இவ்வீதி புனரமைப்பில் ஊழல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்றும் அதன்காரணமாகவே தரம் குறைந்த கலவைகளையும் கிரவல் அமைக்கப்பட்டு வீதி உயர்த்திப்போடப்படவில்லை என்றும் இதை தற்காலிகமாக நிறுத்தி சரியான முறையில் இவ்வீதியைப்புனரமைத்துத்தருமாறு இப்பகுதிமக்கள் கோரியுள்ளனர்.

குறித்த வீதியானது 700மீற்றர் நீளமானதுடன் 12அடி அகலம் 46இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இடம்பெற்று வருவதுடன் அமைச்சர்களின் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

குறித்த வீதியானது பல வருடகாலமாக புனரமைப்புச் செய்யப்படவில்லை இப்பகுதியிலுள்ள 500முதல் 750வரையான குடும்பங்கள் குறித்த வீதியூடாக வவுனியா நகருக்குச் சென்று வருகின்றார்கள். அனைவரும் நிரந்தர குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் வீதி புனரமைப்பில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்ததையடுத்து உத்தியோகத்தர்கள் குழு ஒன்று சென்று பார்வையிடவுள்ளதாகத் தெரிவித்தள்ளனர்.

வீதி புனரமைக்கும் போது அதற்கான ஒதக்கீடுகள் சரியாக தெரிவு செய்து ஒதுக்கப்படவதில்லை வீதி புனரமைக்கும்போது எத்தனை கல்வெட்டுக்கள் உள்ளது அதன் புனரமைப்புத் தொடர்பாக ஆராயாமல் வீதியின் நீளத்தையும் அகலத்தையும் வைத்து வீதிபுனரமைப்புப்பணியினை மேற்கொண்டள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like