எதிர்வரும் 25ம் திகதி மூடப்படும் பாடசாலைகள் : ஏன்? எதற்காக முழு விபரங்கள் உள்ளே

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டமொன்றில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிபர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு கல்வி அமைச்சு இதுவரையில் எவ்வித தீர்வினையும் வழங்காத காரணத்தினால், இவ்வாறு தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதி அதிபர்களுடன் இணைந்து தமது சங்கம் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட 4200 அதிபர்களுக்கு இதுவரையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை எனவும், 2016ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட அதிபர்கள் பலருக்கு இதுவரையில் பாடசாலைகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதி அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களையும் கொழும்பிற்கு அழைத்து தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

You might also like