இளைஞனுக்கு எதிராக பொய்யான முறைப்பாடு செய்த பெண் கைது

இளைஞர் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தார் என பொய்யான முறைப்பாடு ஒன்றை செய்த பெண்ணை பொலியத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ள ஆணொருவரை தாக்குதல் குற்றச்சாட்டில் இருந்து காப்பற்ற பெண் இந்த பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பெண் முறைப்பாடு செய்த இளைஞனே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

எவ்வாறாயினும், பெண்ணின் முறைப்பாடு தொடர்பில் சந்தேகம் கொண்டு, பொலியத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த சமரகோன் வழிகாட்டலில் தேமற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளில் முறைப்பாடு பொய்யானது என தெரியவந்துள்ளது.

தன்னுடன் தொடர்பில் உள்ள ஆணை காப்பற்ற தான் இந்த முறைப்பாட்டை செய்ததாக பெண், பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து பெண்ணை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.

தங்காலை நீதவான் மஹி விஜேவீர முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பெண்ணை, ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் பொய்யான முறைப்பாட்டை செய்து பொலிஸாரை தவறாக வழிநடத்தியமை, ஒருவருக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் பொய்யான முறைப்பாடு செய்தமை ஆகிய குற்றச்சாட்டில் பொலிஸார் பெண்ணுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

You might also like