நீதிமன்றத் தடையை மீறி நடத்தப்பட்ட இரவு வகுப்பு! பெற்றோர் விசனம்

எந்தவிதமான வகுப்புக்களும் இரவு ஆறுமணிக்கு மேல் நடத்தக் கூடாது என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மீறும் வகையில் மட்டக்களப்பில் தனியார் வகுப்பு ஒன்று நடத்தப்பட்டமை குறித்து பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் அண்மையில் 6 மணிக்கு பின் எந்தவிதமான வகுப்புகளும் நடாத்த கூடாது என்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றினை பிறப்பித்து இருந்தது.

ஆனாலும் இந்த உத்தரவுக்கு மாறாக இன்று மட்டக்களப்பில் ஒரு தனியார் வகுப்பு இரவு 7 மணிவரைக்கும் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் இரவு நேர வகுப்புக்கள் நடைபெறுவதை தடுத்தல் சம்பந்தமாகவும், தனியார் கல்வி நிலையங்களில் நடைபெறும் துஸ்பிரயோகங்கள் சம்பந்தமாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு நீதவான் மாணிக்கவாசகர் கணேசராசா ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து பிரதி பொலிஸ்மா அதிபர்; அவ்விதமான தனியார் கல்வி நிலையங்கள் மீது விசாரணை நடத்தவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூறப்பட்டபடி ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் நடாத்துதல் மற்றும் மாலை 6 மணி வரைக்கு பின்பு வகுப்புகள் நடைபெறும் கல்வி நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நீதவான் மாணிக்கவசகர் கணேசராசா பணிப்புரைவிடுத்தும் இன்று இந்த வகுப்பு நடைபெற்றுள்ளது .

சட்டத்தை மதிக்காத இது போன்ற ஆசிரியர்கள் இருக்கும் வரைக்கும் எவ்வாறு பிள்ளைகளின் எதிர்காலத்தை சீர்செய்வது என கேள்வி எழுப்பட்டுள்ளது.

You might also like