வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம்

​வவுனியா மாவட்டத்தில் கணிதம், விஞ்ஞானம், கலைப்பிரிவுகளில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர்.

கணிதப்பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று சிவதுர்க்கா சத்தியநாதன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் (அம் மாணவி விபத்தில் பலியாகிவிட்டார்), துவாரகா பகிரதன் 3 ஏ பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை விஞ்ஞான பிரிவில் மதுரா தனபாலசிங்கம் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பவதாரனி சிவபாலராஸா 3 ஏ சித்திகளை பெற்று இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவில் ஆங்கில பிரிவில் தேவகி பிரபுராஜ் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினையும்  கலைப்பிரிவில்  அவதாரசர்மா 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்றுள்ளார்.

இதேவேளை வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தினை சேர்ந்த ரங்கநாதன் ஜதுகுலன் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாமிடத்தினையும் கணித பிரிவில் செல்வதேவன் கனிசியன் 2ஏ பி சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 4 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

You might also like