கொள்ளையில் ஈடுப்பட்ட STF சிப்பாய் – காட்டிக் கொடுத்த நாய்

கடை ஒன்றை உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளைடியத்த நபர் திருகோணமலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடையில் இருந்த பணம், தொலைபேசி, உபகரணங்கள் மற்றும் சிகரெட் தொகை என்பன சந்தேகநபரால் திருடி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய பொலிஸ் நாயை ஈடுப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like