வெளிநாடு சென்ற பெண்! சடலமாக பொதியில் அடைக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பட்டார்!

வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு பையில் அடைத்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு பணிப்பெண்ணாக சென்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் அழுகிய உடலை பெட்டி ஒன்றில் வைத்து, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பகுதியை சேர்ந்த 32 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரண விசாரணையின் போது உயரிழந்த பெண்ணின் உறவினர்கள் வழங்கிய சாட்சியங்களுக்கு அமைய சில விடயங்கள் தெரிய வந்துள்ளது.

கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் அவர் மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றுள்ளார். அவர் பணி செய்த வீட்டில் ஒரு வயோதிப பெண் உள்ளார் எனவும் அவர் தொடர்ந்து தன்னை தாக்கியதாக தொலைப்பேசி ஊடாக தெரிவித்துள்ளார்.

அவரிடம் இருந்து அவரது அக்காவுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியாக தொலைபேசி அழைப்பு கிடைத்த பின்னர் அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

எனினும் 2017ஆம் ஆண்டு அவர் உயிரிழந்து விட்டதாக சவூதி அரேபிய தூதரக அலுவலகம் ஊடாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் வசித்த மாடி வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்த பின்னரே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த நாட்டு பிரதேச மக்களினால் பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், அந்த வீட்டினை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த பெண்ணை கொலை செய்து பை ஒன்றில் வைத்து குளியலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பைக்கு அருகில் மேலும் இரண்டு பயண பைகள் காணப்பட்டதாகவும், அதில் அந்த பெண்ணின் ஆடைகள் மற்றும் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவரது சடலத்தை பெட்டி ஒன்றில் வைத்து சீல் வைக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மரண விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

You might also like