கிளிநொச்சியில் 83 நாளாகவும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று 83 ஆவது நாளாகவும் தொடர்ந்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் குறித்த போராட்டம் தொடரப்பட்டுள்ளது.

மேலும், கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like