வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக்கைதி உயிரிழப்பு

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதியோருவருக்கு நேற்றையதினம் (12.05.2017) ஏற்ப்பட்ட சுகயினம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலுள்ள சிறையில் விளக்கமறியிலில் வைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சி. சமூவேல் 66 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்த சிறைக்கைதியே சுகயினம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி இன்று (13.05.2017) காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ பரிசோதனைகளுக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like