அக்கினிச்சிறகுகள் அமைப்பு முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களை கேவலப்படுத்தும் செயற்பாட்டில்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி என்ற பெயரில் போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என ஜனநாயக போராளிகள் கட்சிதெரிவித்துள்ளது

இன்றைய தினம் காலை 11 மணிக்கு முல்லைதீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

உதைபந்தாட்ட போட்டிகள் நடாத்தி வடகிழக்கு மாகாணங்களில் வீரர்களை தயார்ப்படுத்துவதை நாம் வரவேற்கின்றோம் ஆனால் அதனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி என்ற பெயரில் நடாத்துவதை ஜனநாயக போராளிகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

அத்தோடு இந்த போட்டி மே மாதம் நடைபெறுவது இழந்த மக்களை மக்கள் நினைவேந்தும் நேரத்தில் நாடத்துவதையும் இறுதி போட்டி பல உயிர்கள் காவுகொள்ளப்பட்ட இரணைப்பாலை மைதானத்தில் நடாத்துவதனையும் ஒட்டுமொத்தத்தில் பவலி சுமந்த மாதத்தில் இந்த போட்டி நடத்துவதை வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்தனர்.

இந் நிகழ்விற்கு யூருப் தமிழ் (tube tamil) அனுசரனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like