5 ஆண்டுகளில் 392 வழக்குகளை தொடர்ந்த இலஞ்ச ஆணைக்குழு

இலஞ்ச ஆணைக்குழு கடந்த 5 வருடங்களில் நீதிமன்றத்தில் 392 வழக்குகளை தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நீதவான் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ட்ரான்ஸ்பேரன்சி இண்டர்நேஷனல் நிறுவனம் கோரியமைக்கு பதிலளிக்கும் வகையில் இலஞ்ச ஆணைக்குழு இந்த தகவல்களை வழங்கியுள்ளது.

கடந்த 5 வருடங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றவாளிகள் 106 பேர் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 2 ஆண்டுகளில் இலஞ்ச ஆணைக்குழு இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க பல நிகழ்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு நடைபயணத்தை ஒழுங்கு செய்ய ஒத்துழைப்புகளை வழங்குவது, நாட்டின் பல இடங்களில் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

மேலும், ஊழலை ஒழிக்கும் வகையிலான ஸ்டிக்கர்கள் நாடு முழுவதும் ஒட்டப்பட உள்ளன எனவும் இலஞ்ச ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

You might also like