இறப்பதற்கு முன் கணவரை பற்றி கூறிய மனைவி: கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ

கணவர் கொடுமைப்படுத்தியதால், உயிரை மாய்த்து கொள்வதாக இறக்கும் முன் அப்பெண் கண்ணீருடன் கூறிய வீடியோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முருகப்பன்-கெளரி. இந்த தம்பதிகளுக்கு கடந்த 4-ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்த சில மாதங்களில் இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மனைவியை முருகப்பன் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் நிலையில் முருகப்பன், தனது மனைவியிடம், சேர்ந்து வாழ விரும்புவதாகவும், எனவே வழக்கை வாபஸ் பெறுமாறும் கூறி உள்ளார்.

வழக்கை வாபஸ் பெற்றதும், மனைவியுடன் வாழ்ந்து வந்த முருகப்பன் அடிக்கடி குடித்து விட்டு வந்து அவரை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

மனமுடைந்த கெளரி, வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக தனது செல்போனில், கணவர் கொடுமைப்படுத்தியதால் உயிரை மாய்த்துக் கொள்வதாக, கெளரி வீடியோ பதிவு செய்துள்ளார். தனது குழந்தையை, பெற்றோர் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும், கண்ணீருடன் உருக்கமாக கெளரி தெரிவித்துள்ளார்.

You might also like