70 வயதில் கணவர் செய்த செயல்: ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிய மனைவி

மனைவியுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று கணவன் அழைத்ததால் ஆத்திரத்தில் மனைவி அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி(70), இவரது மனைவி இளஞ்சி.

இருந்த போதும் இவர் மரியாயி என்பவரை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் குப்புசாமி, தனது முதல் மனைவியான இளஞ்சியத்தை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார்.

இளஞ்சியத்தை பார்த்த அவர், தனிமையில் இருக்க வேண்டும் என்று அழைத்துள்ளார்.

குப்புசாமி மீது கடும் கோபத்தில் இருந்த இளஞ்சி, அருகிலிருந்த அரிவாளால் குப்புசாமியை கடுமையாக வெட்டியுள்ளார். பெரிதும் பாதிப்புக்குள்ளான குப்புசாமி சம்பவ இடத்திலே இறந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இளஞ்சியை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like