தாதியர் சேவையின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: ஜனாதிபதி

தாதியர் சேவையில் எந்த நியாயமான கோரிக்கைகளையும் புறந்தள்ள அரசாங்கம் தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரியில் இன்று நடைபெற்ற தாதியர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

தாதியர் சேவை மற்றும் மருத்துவ சேவை என்பன சீர்குலைந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். இந்த சேவைகளில் பெரும்பாலானவர்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வருகின்றனர்.

மிகவும் சிறிய தரப்பினர் தமது கடமைகள் என்ன என்பதை அடையாளம் காணவில்லை என ஜனாதிபதி கூறியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

You might also like